ஜெருசலேம்:
உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 10 நாளுக்கும் மேலாக ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச்செல்ல முயன்று வருகிறார்கள். அவர்கள் எல்லையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். வெளிநாட்டினரும் வெளியேறி வருகின்றனர்.
ஆனால், ரஷிய படைகள் தாக்குதல் தீவிரமடைந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ளது. இதனால் அங்கிருந்து வெளிநாட்டினர் வெளியேற முடியவில்லை.
இதற்கிடையே, மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வோல்னோவாகா ஆகிய 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்தது.
இந்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் புதினை இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் திடீரென சந்தித்தார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.