‘சூரரைப் போற்று’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘
எதற்கும் துணிந்தவன்
‘ படத்தில் நடித்து முடித்துள்ளார்
சூர்யா
. அண்மையில் ஓடிடியில் வெளியான சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘எதற்கும் துணிந்தவன்’ வரும் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 5 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து சூர்யா பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா மற்றும் சூர்யா இருவரும் புதிய படத்தில் இணைய உள்ளனர்.
பிளாட்பார்மில் படுத்துறங்கும் தளபதி விஜய்யின் தந்தை: தீயாக பரவும் வீடியோ..!
இதனிடையில்
வெற்றிமாறன்
இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட ‘
வாடிவாசல்
‘ படமும் வரிசையில் உள்ளது. இந்தப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் தவியாய் தவித்து வருகின்றனர். இந்தப்படம் எப்போது தொடங்கப்படும் என இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில்
சிறுத்தை சிவா
இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
பாலாவிற்கு முன்பாகவே சூர்யாவிடம் கதை சொல்லி ஓகே பண்ணிவிட்டாராம் சிவா. ஆனால் தற்போது தனக்கு முன்பாகவே பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதால் அவர் மீது செம்ம கடுப்பில் இருக்கிறாராம் சிவா. இதனால் உங்களை நம்புன வேலைக்கு ஆகாது என தமிழ், தெலுங்கில் உருவாகும் வேறு ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம் சிவா. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் தியேட்டரில் COMEBACK கொடுப்பாரா சூர்யா?