ஊரெல்லாம் உக்ரைன் பக்கம் திரும்பியிருக்க.. வட கொரியா என்ன பண்ணிட்டிருக்கு பாருங்க!

உக்ரைன் யுத்தம் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில் வட கொரியா சத்தமே இல்லாமல் இந்த ஆண்டின் 9வது ஏவுகணை சோதனையை நிகழ்த்தி அலற விட்டுள்ளது.

இந்த வருடம் தொடங்கி 3 மாதம்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் 9வது ஏவுகணை சோதனையை நடத்தி அமெரிக்காவுக்கு எரிச்சலைக் கொடுத்துள்ளது வட கொரியா. கொரிய தீபகற்பத்தின் கிழக்கே நடந்த இந்த சோதனையில் சீறிப் பாய்ந்த ஏவுகணை பின்னர் கடலில் விழுந்தது. சோதனை வெற்றிகரமாக இருந்ததாக வட கொரியத் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

வட கொரியா நடத்திய இந்த சோதனையைத் தொடர்ந்து தென் கொரியாத ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது. கொரிய தீபகற்பத்திற்கு மட்டுமல்லாமல், சர்வதேச சமுதாயத்திற்கும் இந்த சோதனை மிரட்டல் தருவதாகும் என்று
தென் கொரியா
கூறியுள்ளது.

வட கொரிய தலைநர் பியாங்காங்குக்கு அருகே உள்ள சுனான் என்ற இடத்திலிலிருந்து ஏவுகணை செலுத்தப்பட்டது. வான்வெளியில் 270 கிலோமீட்டர் தூரத்திற்கு பறந்து பின்னர் கடலில் அது விழுந்தது. இந்த ஏவுகணை சோதனையின் விளைவுகள் குறித்து அமெரிக்காவும், தென் கொரியாவும் ஆராய்ந்து வருகின்றன.

எங்க ஏரியா உள்ளே வராதே.. மண் மூட்டையால் தடை போடும் உக்ரைன் குட்டீஸ்..!

உக்ரைனில் யுத்தம் வலுத்து வரும் நிலையில் வட கொரியா இப்படி ஏவுகணை ஏவுவது சரியல்ல என்று தென் கொரிய நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் எச்சரித்துள்ளது. வட கொரியா இப்படிப்பட்ட செயல்களை நிறுத்த வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.

உக்ரைன் யுத்தம் மட்டுமல்ல, சீனாவில் குளிர்கால பாராலம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதேபோல தென் கொரியாவில் மார்ச் 9ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் தான் உண்டு, தன் சோதனை உண்டு என்று அதகளம் செய்து வருகிறது வட கொரியா.

விமானப்படை இல்லாமலேயே.. ரஷ்யா வேகமாக முன்னேறுகிறது.. பரபர தகவல்!

இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று சோதனை செய்து பார்க்கப்பட்ட ஏவுகணையானது அமெரிக்கா வரை சென்று தாக்கக் கூடிய வல்லமை பெற்றதாக கூறப்படுகிறது. இதுதான் அமெரிக்காவை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.

வட கொரியா இந்த வருடத்தில் நடத்திய 9வது
ஏவுகணை சோதனை
இது. ஆனால் ஜனவரி மாதம் மட்டும் இது 7 சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அதிர வைத்தது. அந்த சோதனையில் புதிய வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையும் அடக்கமாகும்.

வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு இன்னொரு காரணத்தையும் நிபுணர்கள் சொல்கிறார்கள். அதாவது ரஷ்யா விவகாரத்திலிருந்து அமெரிக்காவை திசை திருப்புவதற்காக ரஷ்யாவின் தூண்டுதலின் பேரில் இந்த சோதனையை வட கொரியா நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உக்ரைன் மீதான கவனத்திலிருந்து உலக நாடுகளை திசை திருப்பும் உத்தியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது என்பது அவர்களின் கருத்தாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.