உத்தரப் பிரதேசத்தில் என்ஜின் மற்றும் ரயில் பெட்டிகளில் தீப் பிடிப்பதை தடுப்பதற்காக, மற்ற ரயிலை பயணிகள் தள்ளிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே டவுராலா ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ரயில் இன்ஜினிலும், இரு பெட்டிகளிலும் திடீரென தீப் பிடித்தது. இதையடுத்து, மற்ற பெட்டிகளில் தீப் பரவுவதை தடுக்க அங்கிருந்த பயணிகள், ரயில் நிலைய ஊழியர்கள் என அனைவரும் ஒன்றுகூடி ரயில் பெட்டிகளை சற்று தூரமான பகுதிக்கு தள்ளிச் சென்றனர்.
இதனால் ரயில் இன்ஜினில் பிடித்த தீ மற்ற பெட்டிகளுக்கு பரவுவது தடுக்கப்பட்டது. பின்னர் தீயணப்புத்துறை அதிகாரிகள், தீப் பிடித்த ரயில் பெட்டிகளை தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவங்களால் சிறிது நேரம், டவுராலா ரயில் நிலையத்தில் மற்ற ரயில்கள் கிளம்புவதில் தாமதம் ஏறபட்டது. இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிரிழப்போ, காயங்களோ பயணிகள் யாருக்கும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM