”’ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்ததற்காக “கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன் என கேட்கிறார்கள். பெரியார் படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன். நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார் நடிகர் சத்யராஜ்.
நடிகர் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ வரும் மார்ச் 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதனையொட்டி, நேற்றிரவு நடந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீட்டு நிகழ்வில் படத்தை வெளியிடும் உதயந்தி ஸ்டாலின், பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின்,
“’ராதே ஷ்யாம்’ குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள், ரெட் ஜெயண்ட் மூவீஸ் ரிலீஸ் பண்ண ’எஃப்ஐஆர்’ படத்தின் சக்சஸ் மீட்டிற்கே என்னால் வரமுடியவில்லை. என் படம் இன்று தான் ஆரம்பித்துள்ளது. கட் அடித்துவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் 2 மாதம் முன்னாடியே பார்த்தேன். அப்போது, 3 1/4 மணி நேரம் ஓடியது. படம் ஒவ்வொரு காட்சியும் டிரெய்லர் மாதிரியே பிரமாதமாக இருந்தது. பிரபாஸ் உடைய ஃபேன் நான். பாகுபலிக்கு முன்னாடியே உங்களை பிடிக்கும். பூஜா இங்கு அரபிக்குத்து குத்தினார். இந்தப்படத்திலும் கலக்கியிருக்கிறார். சத்யராஜ் சார் ஒரு வித்தியாசமான ரோல் செய்துள்ளார். கடைசி காட்சியில் ஒரு அட்டகாசமான ஃபைட் இருக்கிறது. இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் பிரமாண்டமாக வெளியிடுகிறோம். பார்த்து ரசியுங்கள் நன்றி” என்றார். அவரைத்தொடர்ந்து பேசிய, நடிகர் சத்யராஜ்,
“பிரபாஸை நாங்கள் டார்லிங் என சொல்வோம். பூஜா ஹெக்டே டார்லிங்கின் டார்லிங். கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன் என கேட்கிறார்கள். பெரியார் படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன். அப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும். நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன். அதை என்ன சொல்வது? நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும். இந்தப்படம் மிக அழுத்தமான காதல் கதை. பிரபாஸ் பறந்து சண்டை போடுவார் என்றால், இதில் கப்பலே பறக்கிறது. இங்கு ஜேம்ஸ் கேமரூன் தான் வந்திருக்க வேண்டும். அவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது. பிரபாஸின் அழகுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது. ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு முக்கியமான பொறுப்பு வந்துள்ளது. பான் இந்தியா என்று எல்லா ஸ்டேட்டிலிருந்து ஒரு நடிகரை போட்டு எடுக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் உண்மையில் பான் இண்டர்னேஷனல் படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்று பேசினார்.
“சத்யராஜ் என் செல்ல கட்டப்பா. அவருடன் ’மிர்ச்சி’ படம் முதல் முறையாக பண்ணினேன். அது சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பிறகு ’பாகுபலி’. இப்போது, இந்த படத்தில் ஒரு அருமையான பாத்திரம் செய்துள்ளார். இது அருமையான காதல் கதை. ஆக்சனும் இருக்கிறது. காதல் கதைக்கு மியூசிக் முக்கியம் ஜஸ்டின் அற்புதமான இசையை தந்துள்ளார். இந்த படத்தின் நாயகன் மனோஜ் சார் தான். என்னை அத்தனை அழகாக காட்டியுள்ளார். எல்லோரும் விஷுவலை பாராட்டுகிறார்கள். எல்லாம் மனோஜ் சாருக்குதான். இந்தப்படத்தில் பூஜா மிக அழகாக இருக்கிறார் கெமிஸ்ட் ரி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பிரமோத் என்னை வச்சு லவ் ஸ்டோரி எடுத்திருக்கிறார். நிறைய தைரியம் இருக்கணும், இயக்குநர் பாகுபலிக்கு முன்பே, இந்தக் கதையை சொன்னார். எப்படி என்னை காதல் கதையில் யோசித்தார் என தெரியவில்லை. 5 வருடம் நீண்ட பயணம். ’ராதே ஷ்யாம்’ மிக நல்ல படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி” என்று இறுதியாக உற்சாகமுடன் பேசினார் நடிகர் பிரபாஸ்.