கோவில்கள் மீதான அரசு அதிகாரத்தை நீக்கி, அவை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப் போவதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
நேற்று கர்நாடக சட்டசபையில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வரும், நிதியமைச்சருமான பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கர்நாடகாவில் கோவில்கள் மீதான அரசின் கட்டுப்பாடு நீக்கப்படும். அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களுக்கு தன்னாட்சி உரிமம் வழங்கப்படும். அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உதவ, அரசு வசம் உள்ள கோவில் நிலங்களுக்கான இழப்பீடு 48 ஆயிரத்தில் இருந்து, 60 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.
‘ஆன்லைன்’ வாயிலாக கோவில் சேவைகளை வழங்க ஒருங்கிணைந்த நிர்வாக மென்பொருள் பயன்படுத்தப்படும். ஆண்டுதோறும், 30 ஆயிரம் பேர் காசி யாத்திரை செல்ல தலா, 5,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். கர்நாடக சுற்றுலா வளர்ச்சி கழகம் வாயிலாக ‘பவித்ர யாத்ரா’ எனும் திருத்தலச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில், கர்நாடக சுற்றுலா பயணியர் தங்க, 85 கோடி ரூபாய் செலவில் விடுதி கட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement