திருவனந்தபுரம்:
தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இருந்து வடமேற்கு நோக்கி நகர்வதாகவும், இதன் காரணமாக இன்று முதல் திங்கள் கிழமை வரை 3 நாட்களுக்கு கேரளாவின் பல பகுதிகளிலும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழையின் காரணமாக கடலில் சூறைக்காற்று வீசும் என்றும் மீனவர்கள் வருகிற 7-ந் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படியுங்கள்… மக்கள் பிரதிநிதிகள் பொது வாழ்க்கையில் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: வெங்கையா நாயுடு