சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தம்பி ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ் ஓபிஎஸ் அதிரடி

சென்னை: சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தம்பி ராஜா உள்பட 3 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக  அதிமுக ஒருங்கிப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்து உள்ளனர்.
மற்றொரு அறிக்கையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட 10 அதிமுகவினரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இன்னொரு அறிக்கையில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுகவுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த  அதிமுக நிர்வாகிகள் 23 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, அதிமுகவின் இரட்டை தலைமை மீது அதிமுக நிர்வாகிகள் தொண்டர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. இதையடுத்து அதிமுகவின் இரட்டை தலைமை வெளியேறி சசிகலா தலைமையில் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுதுத ஓ.பி.எஸ்ன் சொந்த மாவட்டத்திலும் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.பி.எஸ். ராஜாவுக்கு அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என அதிரடியாக கூறினார்.
அதைத்தொடர்து, அவர் தனது ஆதரவாளர்களுடன் திருச்செந்தூர் சென்று, அங்கு சசிகலாவை சந்தித்து பேசினார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓபிஎஸ் ராஜா உள்பட 4 பேரை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்ளை – குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஓ.ராஜா (ஓபிஎஸ் சகோதரர்), தேனி மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் எஸ்.முருகேன், தேனி மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் வைகை கருப்புஜி, கூடலூர் நகர புரட்சித்தலைவி பேரவை செயலாளர் எஸ்.சேதுபதி ஆகியோர் இன்றுமுதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்  நீக்கிவைக்கப்படுகிறார்கள். அவர்களிடம் கழக உடன்பிறப்புகள் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்துநீக்கம் – நீக்கம் கடிதத்தில் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் கையொழுத்துட்டுள்ளனர்.

மற்றொரு அறிக்கையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட 10 பேரையு நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இன்னொரு அறிக்கையில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுகவுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த  அதிமுக நிர்வாகிகள் 23 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.