மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே 2-வது சுற்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கான ராக்கெட் இன்ஜின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்து வருகின்றன. அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஜப்பான், கனடா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பா நாடுகள் இணைந்துள்ளன. ரஷ்யா அறிவிப்பால் விண்வெளி ஆய்வு மையத்துக்கு இன்ஜின்கள் சப்ளை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.