பீஜிங்,
சீனாவுக்கான புதிய இந்திய தூதராக பிரதீப் குமார் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பை ஏற்பதற்காக சீனாவுக்கு நேற்று சென்றடைந்தார். அங்கு கொரோனா கால கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், நெறிமுறைப்படி அவர் கட்டாய தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.
இதை அங்குள்ள இந்திய தூதரகம், டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. அவர் ஷாங்காய் நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.
சீனாவுக்கான இந்திய தூதராக இருந்த விக்ரம் மிஸ்ரி, தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது இடம் காலியானதால் பிரதீப் குமார் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.