ரஷ்யா – உக்ரைன் போல் மூலம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாலும், இவ்விரு நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்கள் பல துறைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் காரணத்தால் ஒட்டுமொத் சப்ளை செயினும் கடுமையாகப் பாதித்துள்ளது.
இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ் கச்சா எண்ணெய் பற்றி முக்கியமான கருத்தை வெளியிட்டு உள்ளார்.
எலான் மஸ்க்-ஐ மிரட்டிய ஃபோர்டு நிறுவனம்.. நடந்தது என்ன தெரியுமா..?!
டெஸ்லா நிறுவனம்
பெட்ரோல், டீசல் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த விஷத்தையும் எப்போதும் ஆதரிக்காத டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க், எரிபொருள் தொடர்பாகப் பல கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வரும் நிலையில் உக்ரைன்- ரஷ்யா போருக்கு மத்தியில் மிகவும் முக்கியமான டிவிட் ஒன்றை செய்துள்ளார்.
எலான் மஸ்க்
சொல்லவே வெறுப்பா இருக்கு, ஆனாலும் நாம் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை உடனடியாக உயர்த்த வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ரஷ்யா-விடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைப் பல நாடுகள் குறைந்துள்ளது. இதேபோல் பிற நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காத காரணத்தால் இதன் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
ரஷ்யா எண்ணெய் – எரிவாயு
இதுப்போன்ற அசாதாரண நேரங்கள் அசாதாரண நடவடிக்கைகளைக் கட்டாயம் தேவை என எலான் மஸ்க் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் டெஸ்லாவை எதிர்மறையாகப் பாதிக்கும், ஆனால் நிலையான ஆற்றலுக்கான தீர்வை உணடியாக உருவாக்க முடியாது. ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகளை ஈடுசெய்ய உடனடியாகச் செயல்பட வேண்டியது தற்போது வர்த்தகச் சந்தைக்கு முக்கியமானதாக விளங்குகிறது.
கூகுள் முதல் ஆப்பிள் வரை
கூகுள் முதல் ஆப்பிள் வரையில் அனைத்து நிறுவனங்களும் ரஷ்யா மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ராணுவ தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு நிதியுதவிகளைச் செய்து வருகிறது.
இண்டர்நெட் சேவை
இந்நிலையில் ரஷ்யா உக்ரைன்-ஐ கைப்பற்றி வரும் நிலையில் இண்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் பல அரசு இணையத் தளங்கள் சில நாட்களுக்கு முன் முடங்கியது.
ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க்
இந்நிலையில் அந்நாட்டின் துணை அதிபர் மைக்கைலோ ஃபெடோரோவ் டிவிட்டரில் எலான் மஸ்க்-ன் உதவியைக் கேட்டார். சில மணிநேரத்தில் உக்ரைன் நாட்டுக்கு ஸ்டார்லிங்க் மூலம் இண்டர்நெட் சேவையை ஸ்பேஸ் எக்ஸ் அளித்து உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.
Hate to say it, but No Choice Tesla Elon musk says need to increase oil and gas output
Hate to say it, but No Choice Tesla Elon musk says need to increase oil and gas output சொல்றதுக்கே வெறுப்பாதான் இருக்கு.. ஆனாலும் சொல்றேன்..! #ElonMusk