பொதுவாக திருமணங்களில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அதேபோன்று, தற்போது மணமக்கள் கோபப்பட்டு அடிதடியில் முடியும் காட்சி அதிகமாக வலம் வருகின்றது.
தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் ஒரு வீடியோவிலும் இதே போன்ற ஒரு சண்டையைக் காண முடிகின்றது.
ஆசையாக மணமகள் காத்திருக்க மணமகன் திருமண மண்டபத்துக்கு மிகவும் தாமதமாக வருகிறார். இதனால் கடுப்பான மணமகள் திருமணத்திற்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் முன்பு அவர் மீது கோபப்படுகிறார். மணமகளின் கோவத்தால் ஆத்திரமடையும் மணமகனும் மணமகள் மீது கோபம் கொள்கிறார்.
மணமகன் மணமகளுக்கு இனிப்புகளை ஊட்ட முயற்சிக்கும்போது, அவர் இனிப்புகளை தூரமாக வீசுகிறார். மணமகனும் மணமகளின் அணுகுமுறையால் கோபமாகிறார். மணமகள் அவர்களது சடங்கின் படி ஒரு கிளாசில் பால் அளிக்க முயலும் போது, மணமகன் அதை ஏற்க மறுத்துவிடுகிறார். இதனால் எரிச்சல் அடைந்த மணமகள் டம்பிளரை தூக்கி எறிகிறார். குறித்த காட்சி வைரலாகி வருகின்றது.