அரியலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி ஒத்திவைக்கப்பட்ட திருமானூர் ஜல்லிக்கட்டு போட்டி, 500 காளைகள், 250 மாடுபிடி வீரர்களுடன் இன்று நடைபெறுகிறது.
அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசிமகத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5 ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை 9 மணி அளவில் எம்எல்ஏ சின்னப்பா, மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 250 வீரர்கள் பங்கேற்றனர். உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகே போட்டியில் காளைகள் மற்றும் மாடு வீரர்கள் போட்டியில் கலம் இறக்கப்பட்டனர்.
போட்டிகளில் வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டவுள்ளது.