தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வரும் சென்னை புத்தகக்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது.
45 ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 800 அரங்குகளில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 19 நாட்கள் இந்த புத்தக காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த புத்தகக்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது. இது குறித்து பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க நிர்வாகிகள், சென்னை புத்தகக் காட்சிகள் இதுவரை 12 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாகவும், ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தகக்காட்சியாக கருதப்படும் சென்னை புத்தகக் காட்சிக்கு இந்த ஆண்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.
இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் கடைசி நாட்கள் என்பதால் வாசகர்கள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்
நடப்பாண்டில் நவீன இலக்கியம் சரித்திர நாவல்கள் குழந்தைகளுக்கான அறிவுத்திறன் சார்ந்த புத்தகங்கள் ஆங்கில நாவல்கள் வரலாற்று நூல்கள் சுயமுன்னேற்ற நூல்கள் உள்ளிட்டவற்றை வாசகர்கள் தேடித்தேடி வாங்கி சென்றதாக சென்றதாகவும் தெரிவித்தனர்
நாளை நடைபெறும் நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
ஆர். மகாதேவன் கலந்துகொண்டு பதிப்பகத் துறையில் பணியாற்றியவர்களையும், புத்தகக்காட்சி நடைபெற உறுதுணையாக இருந்தவர்களையும் பாராட்டி நினைவுப் பரிசு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.