புதுடில்லி :ஒடிசாவில் அதி நவீன, ‘பிரமோஸ்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ரஷ்யாவின் என்.பி.ஓ.எம்., நிறுவனத்துடன் இணைந்து, பிரமோஸ் அதிநவீன ஏவுகணைகளை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்து வருகிறது.
நிலத்தில் இருந்து மட்டுமல்லாமல், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களிலிருந்தும் செலுத்தக்கூடிய வகையில் இந்த ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.மணிக்கு 3,400 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ., அமைப்பு தொடர்ந்து பரிசோதித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும், அதிநவீன பிரமோஸ் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் இருந்து அந்த ஏவுகணை ஏவப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அந்த ஏவுகணை துல்லி யமாக தகர்த்ததாக, கடற்படை தெரிவித்துள்ளது.
புதுடில்லி :ஒடிசாவில் அதி நவீன, ‘பிரமோஸ்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ரஷ்யாவின் என்.பி.ஓ.எம்., நிறுவனத்துடன் இணைந்து, பிரமோஸ் அதிநவீன ஏவுகணைகளை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.