உக்ரைன் போர் முனையில் சுமார் ஆயிரம்இந்திய குடிமக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுமி பகுதியில் 700 பேரும் கார்க்கிவ் நகரில் 300 பேரும் இருப்பதாக தூதரகங்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்களை போர் ஆபத்து சூழ்ந்த பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டு செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடைசி இந்தியர் பாதுகாப்பாக வெளியேறும் வரை ஆபரேசன் கங்கா நடவடிக்கை தொடரும் என்று வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி அறிவித்துள்ளார்.
உக்ரைனில் இன்னும் 2 அல்லது 3 ஆயிரம் இந்தியர்களே எஞ்சியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே சுமியில் உள்ள சுமார் 800 மருத்துவ மாணவர்கள் ஓட்டல்களின் அறைகளில் சிக்கியிருப்பதாகவும் உணவும் குடிநீரும் கிடைக்காமல் தவிப்பதாகவும் போர்ச்சூழலால் வெளியேற முடியாமல் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.