'போர் வேண்டாம்' நேரலையில் ராஜினாமா செய்த ரஷ்ய தொலைக்காட்சி ஊழியர்கள்!



உக்ரைனில் போர் வேண்டாம் என வலியுறுத்தி, ரஷ்யாவில் உள்ள தனியார் தொலைகாட்சி சேனல் ஊழியர்கள் அனைவரும், நேரலையில் ஒளிபரப்பில் வெகுஜன ராஜினாமா செய்துள்ளனர்.

ரஷ்யா, உக்ரைன் இடையே எல்லை பிரச்சனை இருக்கும் நிலையில், நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முயன்றது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவிக்க, ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது.

உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாகும் என அதன் அதிபர் விலாடிமிர் புடின் நினைப்பதனால், நேட்டோவில் உக்ரைனை இணைக்க கூடாது என கோரி, உக்ரைன் எல்லையில் படையை குவித்து வந்தார்.

இதற்கு, அமெரிக்கா உட்பட மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிப்ரவரி 24-ஆம் திகதி வியாழக்கிழமையன்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. அன்று தொடங்கி தொடர்ந்து பத்தாவது நாளாக ரஷ்ய இராணுவம் உக்ரைனின் பல நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனிடையே, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே பெலாரஸில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மூன்றாம் சுற்று சுமுக பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலிருந்தே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதில் ரஷ்ய குடிமக்களே அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர். ரஷ்யாவின் பல நகரங்களில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் போரை நிறுத்துமாறு போராட்டத்தில் இறக்கினர். அவர்களில், குழந்தைகள் என்றும் பாராமல் 6,000-க்கும் அதிகமான ரஷ்யர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவில் உள்ள Dozhd (TV Rain) எனும் தொலைகாட்சியில், அங்கு பணியாற்றும் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழியர்கள், நேரலை ஒளிப்பரப்பிலேயே வந்து “போர் வேண்டாம்” என்று கூறி, உடனடியாக தங்கள் வேலையை ராஜினாமா செய்வதாக வெளிநடப்பு செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.