Realme நிறுவனம்,
ரியல்மி 9 சீரிஸ்
ஸ்மார்ட்போன்களை மார்ச் 10ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. சமீபத்தில் நிறுவனம் ரியல்மி 9 ப்ரோ, ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 9 சீரிஸில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் வரவு குறித்து பயனர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், தனது புதிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி குறித்து நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. Flipkart ஷாப்பிங் தளம் வாயிலாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. வெளியாக இருக்கும் புதிய சீரிஸின், ரியல்மி 9 4ஜி, ரியல்மி 9 5ஜி, ரியல்மி 9 5ஜி எஸ்இ ஆகிய மூன்று போன்கள் இடம்பெறுகிறது.
ரியல்மி 9 சீரிஸ் அம்சங்கள்
பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி புராசஸர் உடனும், குறைந்த விலை 5ஜி போன் மீடியாடெக் டைமென்சிட்டி 810 5ஜி சிப்செட் உடனும் வெளியாகிறது. பயனர்கள் தேர்வுக்கு ஏற்ற வகையில் இரண்டு புராசஸர்கள் கொண்ட மாடல்கள் வெளியாவதால், பட்ஜெட்டுக்கு ஏற்ப ரியல்மி 9 ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியீடு குறித்த பக்கத்தை பிளிப்கார்ட் திறந்துள்ளது. ரியல்மி 9 5ஜி மற்றும் ரியல்மி 9 எஸ்இ 5ஜி ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் 8.5mm தடிமனுடன் Fluid லைட் டிசைன் உடன் வருகிறது. இதில் ஒன்று ஸ்னாப்டிராகன் புராசஸரைக் கொண்டும், மற்றொன்று மீடியாடெக் புராசஸர் உடனும் வெளியாகிறது.
மார்ச் 8 அன்று சாம்சங் கேலக்ஸி F23 5g போன் அறிமுகம் – விலை மற்றும் அம்சங்கள்!
ரியல்மி வெளியிட்டுள்ள தகவல்களின் படி,
Realme 9 SE 5G
ஸ்மார்ட்போனில் 144Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டிருக்கும் எனத் தெரியவந்துள்ளது. இந்த தொகுப்பில் வரும் அனைத்து 5ஜி மாடல்களிலும், கைரேகை சென்சார் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 9 சீரிஸ் கேமரா
ரியல்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போனின் கேமராவைப் பொருத்தவரை, 48 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் வருகிறது. மேலும், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் அடங்கிய டிரிப்பிள் கேமரா அமைப்பை இந்த ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ளது.
செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களை சக்தியூட்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 18W பாஸ்ட் சார்ஜிங் அடாப்டர் ஸ்மார்ட்போனுடனே கொடுக்கப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘Nothing’ டீஸர்!
இந்த ஸ்மார்ட்போன்கள் 6ஜிபி, 8ஜிபி ரேம் வேரியண்டுகளில் வெளியிடப்படுகிறது. ஸ்டோரேஜ் மெமரியைப் பொருத்தவரை 64ஜிபி, 128ஜிபி என இரு தேர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் வெளியீடு குறித்து அறிவித்துள்ள நிறுவனம், அதன் விற்பனை தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.
Read more:
Metaverse போன் Poco X4 Po போன் இருக்க வேற என்ன வேணும் – MWC 2022 நிகழ்வில் புதிய iPhone SE 3 விலை இவ்வளவு தானா