மீண்டும் 1998… ரஷ்யாவை துரத்தும் வரலாற்று கருப்பு பக்கம்.. புதின் பாவம்..!

விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு பல வருடமாகத் திட்டமிட்டு தனது நிதிநிலையை மேம்படுத்திக் கொண்டு உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. ஆனால் ரஷ்யா சற்றும் எதிர்பார்க்காத ஒன்று என்னவென்றால் இவ்வளவு வேகமாக உலக நாடுகள் மாறி மாறி தடையை விதித்துத் தான்.

தற்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் இந்தியா, சீனா தவிர அமெரிக்கா, பிரிட்டன் முதல் சிங்கப்பூர் வரையில் பலதரப்பட்ட தடைகளை விதித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக ரஷ்யா மீண்டும் 1998ஆம் ஆண்டுச் சந்தித்த கருப்புப் பக்கத்தை மீண்டும் பார்க்க போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா

உலகின் 11வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ரஷ்யா மீது தற்போது உலக நாடுகள் பொருளாதாரம், வர்த்தகம், நிதியியல் பிரிவில் கடுமையான தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்ய நாணய மதிப்பு, வர்த்தகம், பொருளாதாரம் அனைத்தும் வேகமாகச் சரிந்து வருகிறது.

 கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

மேலும் உலக நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் குறைத்து வரும் காரணத்தால், ரஷ்ய அரசின் வருமானம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் ரஷ்யா விரைவில் 1998ஆம் ஆண்டுச் சந்தித்த மிகப்பெரிய நிதி நெருக்கடி நிலையை மீண்டும் சந்திக்க வாய்ப்பு உள்ளது என ஜேபி மோர்கன் கணித்துள்ளது.

 ஜேபி மோர்கன்
 

ஜேபி மோர்கன்

ஜேபி மோர்கன் கணிப்பின் படி நடப்பு ஆண்டில் ரஷ்யாவின் பொருளாதாரம் -7 சதவீதம் வரையில் சரியும் எனக் கணித்துள்ளது. ப்ளூம்பெர்க் -9 சதவீதம் வரையில் சரியும் எனக் கணித்துள்ளது. ஆனால் 1998ல் ரஷ்யாவின் பொருளாதாரம் -5.3 சதவீதம் மட்டுமே சரிந்தது. அப்படி 1998ஆம் ஆண்டில் என்ன நடந்தது.

 1998ல் என்ன நடந்தது..?

1998ல் என்ன நடந்தது..?

ஆகஸ்ட் 17, 1998 அன்று, ரஷ்ய அரசு ரூபிள் மதிப்பைக் குறைத்தது, உள்நாட்டு வங்கிகளில் வாங்கிய கடனையும், வெளிநாட்டு வங்கி மற்றும் நிதி அமைப்பில் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த தவறியது மட்டும் அல்லாமல் திவாலாக அறிவிக்கப்பட்டது.

 ரஷ்யாவின் பணவீக்கம்

ரஷ்யாவின் பணவீக்கம்

மேலும் இதே 1998 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் பணவீக்கம் 84 சதவீதம் என வரலாற்று உச்ச அளவீட்டை எட்டியது. இதனால் மக்கள் பயன்படுத்தும் அடிப்படை சேவைகளின் செலவுகள் கூடப் பல மடங்கு அதிகரித்தது. இந்தப் பொருளாதாரா நெருக்கடியின் விளைவாக இன்கோம்பேங்க், ஒனெக்ஸிம்பாங்க் மற்றும் டோகோபேங்க் உட்படப் பல வங்கிகள் மூடப்பட்டன.

 வங்கிகள் திவால்

வங்கிகள் திவால்

ரஷ்ய அரசாங்கப் பத்திரங்களில் வங்கிகள் அதிகளவில் முதலீடு செய்திருந்த நிலையில், வங்கிகளும் வங்கி அமைப்புகளும் திவாலாவதை தடுக்க வேண்டும் என்பதற்காக 1998ஆம் ஆண்டில் வங்கி அறக்கட்டளை நவம்பர் 1998 இல் டாய்ச் வங்கியை 10 பில்லியன் டாலருக்கு வாங்கியதன் மூலம் நிதிச் சரிவைத் தவிர்த்தது ரஷ்யா.

 டாய்ச் வங்கி

டாய்ச் வங்கி

இதன் மூலம் யுபிஎஸ், ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ஜப்பானிய தபால் அலுவலகத்தின் லைப் இன்சூரன்ஸ் பண்ட் ஆகியவற்றைத் தொடர்ந்து டாய்ச் வங்கி உலகிலேயே 4வது மிகப்பெரிய நிதி மேலாண்மை நிறுவனமாக மாறியது.

 கருப்புப் பக்கம்

கருப்புப் பக்கம்

1998ஆம் ஆண்டில் இந்தப் பொருளாதாரம், வர்த்தகச் சரிவு மூலம் ரஷ்யா மட்டும் அல்லாமல் ரஷ்யாவை நம்பியிருந்த பல நாடுகளும் இதன் மூலம் பாதிக்கப்பட்டது ரஷ்யாவின் கருப்புப் பக்கமாக இருந்தது. இதுமட்டும் அல்லாமல் 1998ல் பொருளாதாரப் பாதிப்பு மூலம் அந்நாட்டின் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

 பிரதமர் பணிநீக்கம்

பிரதமர் பணிநீக்கம்

பொருளாதாரச் சரிவை ரஷ்ய மத்திய வங்கி ஆகஸ்ட் 17, 1998 அறிவித்த பின்பு, ரஷ்யாவின் முன்னாள் அதிபரான

போரிஸ் யெல்ட்சின், அந்நாட்டின் பிரதமர் செர்ஜி கிரியென்கோ-வை ஆகஸ்ட் 23, 1998 பதவியில் இருந்து நீக்கினார். அடுத்த ஒரு வருடத்தில் அதாவது 31, டிசம்பர் 1999ல் போரிஸ் யெல்ட்சின் இடத்தை விளாடிமிர் பிடித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russia’s economy edge of Collapse; Soon may face 1998 like crisis

Russia’s economy edge of Collapse; Soon may face 1998 like crisis மீண்டும் 1998… ரஷ்யாவை துரத்தும் வரலாற்றுக் கருப்பு பக்கம்.. புதின் தான் பாவம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.