கீவ்:
ரஷியா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று ஐ.நா.பொது சபை உறுப்பு நாடுகள் வலியறுத்தி உள்ளன.
உக்ரைன் எல்லையில் இருக்கும் பெலாரஸில் இரு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில், முற்றுகையிடப்பட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற, பாதுகாப்பான வழித்தடங்களை உருவாக்குவது மற்றும் அவை உருவாக்கப்படும் பகுதிகளில் உள்ளூர் போர் நிறுத்தங்களைக் கடைபிடிப்பது குறித்து ரஷியாவும் உக்ரைனும் தற்காலிக உடன்பாட்டை எட்டின.
இந்நிலையில், உக்ரைன், ரஷியா இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை வரும் திங்கட்கிழமை நடைபெறும் என உக்ரைன் அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியானது.
இதையும் படியுங்கள்…உக்ரைனில் 2 நகரங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தம்- ரஷியா அறிவிப்பு