ரஷ்ய படைகள் நேற்று உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ள நிலையில், மேலும் ஒரு அணுமின் நிலையத்தை கைப்பற்ற அவர்கள் தீவிரமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்தில் நேற்று அவசர கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய ஐநா சபைக்கான அமெரிக்க தூதர் லிண்டா, உக்ரைனின் 2வது பெரிய அணுமின் நிலையம் யுஷ்னோக்ரைன்ஸ்க் நகரில் உள்ள நிலையில் அதனை குறி வைத்து தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக தெரிவித்தார்.
தற்போது அந்த அணுமின் நிலையத்திற்கு 32 கிலோ மீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் உள்ளதால், விரைவில் அதனை கைப்பற்ற ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.