ரஷ்யா தொடர்ந்து 8வது நாளாக உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகின்றது. இதற்கிடையில் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை பல நாடுகளும் விதித்து வருகின்றன.
பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவுடனான வணிக உறவினை துண்டித்துக் கொண்டு வருகின்றன.
முன்னதாக யூடியூப், பேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள், ரஷ்ய ஊடகங்கள் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு தடை விதித்திருந்தன.
8வது நாளாக நீடிக்கும் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி..!

விளம்பரங்களுக்கு தடை
இந்த நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் இன்னொரு படி மேலே போய், ரஷ்யாவில் ஆன்லைன் விளம்பரங்களை விற்பனை செய்வதையும் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது இது கூகுள் தேடல், யூடியூப் உள்ளிட்ட பலவும் அடங்கும் என தெரிவித்துள்ளது.

அதிரடி நடவடிக்கை தான்
உக்ரைன் – ரஷ்யா பதற்றங்களுக்கு மத்தியில் ட்விட்டர் இன்க் மற்றும் ஸ்னாப் இன்க் உள்ளிட்ட நிறுவனங்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்த நிலையில், தற்போது உலகின் மிகப்பெரிய விளம்பர விற்பனையாளரான கூகுளும் இப்படியொரு நடவடிக்கையினை எடுத்துள்ளது.

தேவையான நடவடிக்கை
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பிறகு நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில், ரஷ்யாவில் விளம்பரங்களை தடை செய்கிறோம். நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டுள்ள நிலையில், நாங்கள் தொடர்ந்து தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்.

கூகுள் அடுத்தடுத்த நடவடிக்கை
கூகுள் முன்னதாக ரஷ்யாவுடன் தொடர்புடைய யூடியூப் சேனல்களை ஏற்கனவே தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல உக்ரைனில் கூகுள் மேப்ஸ் சேவையின் சில அம்சங்களும் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது உள்நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி உணவகங்கள் மற்றும் கடைகளில் எவ்வளவு நெரிசல் உள்ளது என்ற நேரலை விவரங்களை கூகுள் மேப்ஸ் வழங்காது என்றும் கூறப்பட்டது.

அடுத்தடுத்த நடவடிக்கைகள்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இதன் காரணமாக உக்ரைனில் இருந்து பல லட்சம் பேர் அகதிகளாக அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த நிலையில் தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்கள் ரஷ்யாவின் பொருளாதாரத்தினை முடக்கும் வகையில் அடுத்தடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளுக்கு மத்தியில், ரஷ்யாவில் உள்ள பணக்காரர்களும் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ukraine- russia crisis: google pausing all ad sales in russia
ukraine- russia crisis: google pausing all ad sales in russia /ரஷ்யாவுக்கு அடுத்தடுத்து விழும் அடி.. கூகுள் எடுத்த அதிரடி முடிவு..!