ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்டு வரும் பொருளாதாரத்தடைகள் போருக்கு சமமானவை ; அதிபர் புதின் <!– ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்டு வரும் பொருளாதாரத்தடைகள்… –>

ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்டு வரும் பொருளாதாரத்தடைகள் போருக்கு சமமானவை என அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க வேறு எந்த நாடாவது தடை விதித்தால், அது ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையாக கருதப்படும் என்றார்.

ரஷ்யாவிற்கு பிற நாடுகளால் தற்போது அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லாததால் நாட்டில் ராணுவ சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என புதின் குறிப்பிட்டார்.

மேலும், மக்களை உக்ரைன் ராணுவம் தொடர்ந்து கேடயமாக பயன்படுத்துவதாகவும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து வருவதாகவும் புதின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.