ரஷ்யா-உக்ரைன் போர்: கோரிக்கைகளை ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் – புடின்

ராணுவ தாக்குதல் தொடங்கிய 3-4 நாட்களில் உக்ரைன் முழுவதையும் தனது ராணுவம் கைப்பற்றும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கருதினார்.ஆனால் உக்ரைனின் துணிச்சலான ராணுவம்  அதனை தீவிரமாக எதிர் கொண்டு வரும் நிலையில் போரின் 9வது நாளான இன்றும் நீடிக்கிறது.

இந்நிலையில், உக்ரைன் நகரங்களில் குண்டுகள் வீசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் மறுத்துள்ளார். அதேசமயம், தனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் பேசத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜெர்மன் அதிபருடன் பேச்சுவார்த்தை

ரஷ்ய அதிபர் அலுவலகமான கிரெம்ளின், உக்ரைன் நகரங்களில் குண்டு வீசப்பட்டது குறித்த  செய்திகள் தவறானவை என்று கூறியுள்ளது. விளாடிமிர் புடினின் இந்த அறிக்கை ஜெர்மன் அதிபர் ஓலாஃப் சோல்ஸுடன், புடின் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு வந்தது. 

போலி செய்தி என மறுப்பு

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பிற பெரிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட செய்தி ஒரு போலியான செய்தி என்று புடின் கூறியுள்ளார். தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே உக்ரைன் தொடர்பான பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்

ரஷ்யா விதித்துள்ள  3 நிபந்தனைகள்

ரஷ்யாவின் கோரிக்கைகளில் உக்ரைனை நடுநிலை மற்றும் அணுசக்தி இல்லாத நாடாக மாற்றுதல், கிரிமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது மற்றும் கிழக்கு உக்ரைனின் பிரிவினைவாத பகுதிகளின் இறையாண்மை ஆகியவை அடங்கும். மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை குறித்த ரஷ்யாவின் எதிர்பார்ப்புகள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், உக்ரைன் அரசாங்கம் ஒரு தர்க்கரீதியான மற்றும் நேர்மறையான அணுகுமுறையைக் காண்பிக்கும் என்றும் நம்பப்படுகிறது. 

மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்

இரு தரப்புக்கும் இடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வார இறுதியில் நடைபெறும் என Kyiv பேச்சுவார்த்தையாளர்கள் கூறுகின்றனர். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இதுவரை இரண்டு சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தாலும், இந்தப் பேச்சுவார்த்தையில் இதுவரையில் குறிப்பிடத்தக்க முடிவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய ராணுவத்தின் வியூகம்

உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தி 9 நாட்கள் கடந்துவிட்டன. திடீரென உக்ரைனைத் தாக்கி அதிவேகமாக கிவ் நகரை கைப்பற்றும் ரஷ்ய ராணுவத்தின் வியூகம் வெற்றியளிப்பதாகத் தெரியவில்லை. உக்ரைனின் முக்கிய நகரங்கள் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தால் குறிவைக்கப்பட்டு வருகின்றன. இந்த போரில் இதுவரை ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். எனினும், பொதுமக்களை குறிவைத்து தான் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என ரஷ்யா கூறுகிறது.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள் 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.