ரஷ்யா-உக்ரைன் போர்: சமீபத்திய முக்கிய தகவல்கள்…



ரஷ்யா மீதான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் ஏறக்குறைய ஒரு போர்ப் பிரகடனம் என்றும், உக்ரைன் மீது பறக்கக் கூடாத வலயத்தை விதிக்கும் எவரும் மோதலில் நுழைந்ததாகக் கருதப்படும் என்றும் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

மரியுபோல் துறைமுகத்தில் பல நாட்கள் தாக்குதல் நடத்தப்பட்டுவரும் நிலையில் பிறகு பொதுமக்கள் தப்பிக்க அனுமதிக்கும் வகையில் ரஷ்யா போர்நிறுத்தத்தை அறிவித்தது. அதனுடன் அருகிலுள்ள வோல்னோவாகா நகரத்திலும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் மரியுபோலில் உள்ள அதிகாரிகள் ரஷ்யர்கள் போர்நிறுத்தத்தை மீறி தொடர்ந்து ஷெல் தாக்குதல் தடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பொதுமக்களை வெளியேற்றும் திட்டத்தை ரத்து செய்துள்ளதாகவும் அறிவித்தனர்.

மரியுபோல் பல நாட்களாக மின்சாரம், தண்ணீர் மற்றும் வெப்பம் இல்லாமல் தவித்துவருகிறது.

ரஷ்யப் படைகள் வடக்கில் இருந்து தலைநகர் கீவ் நகருக்கு மிக அருகில் உள்ளன, ஆனால் வழியில் உக்ரைனிய படையினரால் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கின்றன. கீவின் மேற்கு புறநகர் பகுதிகள் மற்றும் வடக்கு நகரமான செர்னிஹிவ் உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கிறது.

வியாழன் அன்று, செர்னிஹிவில் குடியிருப்புப் பகுதியில் ரஷ்ய விமானத் தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜபோரிஜியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. ரஷ்யா அணுமின் நிலையத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த அணு உலைகளின் தளத்தை பின்னர் ரஷ்ய துருப்புக்கள் கையகப்படுத்தியதாக அறைவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், ரஷ்யாவின் ‘பொறுப்பற்ற’ ஒரே ஒரு தாக்குதல் ‘ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதற்கும் ஒரு பயங்கரமான அச்சுறுத்தலைக் குறிக்கிறது’ என்று கூறுகிறார்.

மாஸ்கோவின் ஐ.நா. தூதர் வசிலி நெபென்சியா, ரஷ்யப் படைகள் ஆலை மீது ஷெல் வீசியதை மறுத்து, அந்த அறிக்கைகள் ‘வெறுமனே பொய்யானவை’ என்று கூறினார்.

உக்ரைன் அதிகாரி ஒருவர், சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவுடன் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை எப்போது நடக்கவுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை, ஆனால் துருக்கியில் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உடனான தொலைபேசி அழைப்பில் புடின், உக்ரைன் மாஸ்கோவின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் அது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், உக்ரைனில் போர் ‘விரைவில் முடிவடையாமல் போகலாம்’ என்றும், அது முடியும் வரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான அழுத்தத்தைத் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

G7 வெளியுறவு மந்திரிகள் ரஷ்யா தனது படையெடுப்பிற்கு மேலும் ‘கடுமையான தடைகளை’ எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கின்றனர், மேலும் அணுமின் நிலையங்களுக்கு அருகே அதன் தாக்குதல்களை நிறுத்துமாறு மாஸ்கோவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

NATO கூட்டமைப்பு உக்ரைன் மீது பறக்க தடை மண்டலத்தை விதிக்காது என நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான போரின் போது செய்யப்பட்ட மீறல்கள் பற்றிய விசாரணைக்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரலாற்று வாக்கெடுப்புக்குப் பிறகு ரஷ்யா முன்பை விட தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, எரித்திரியா மட்டுமே மாஸ்கோவிற்கு ஆதரவாக உள்ளது.

கடந்த வாரம் ரஷ்யா படையெடுத்ததில் இருந்து 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்று ஐ.நா கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் உக்ரைனில் மோதல் பகுதிகளில் உணவு நெருக்கடி ஏற்படுவதைப் பற்றி எச்சரிக்கிறது, அதே நேரத்தில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஏற்படும் இடையூறுகள் உலகளவில் உணவுப் பாதுகாப்பின்மைக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளது.

உக்ரைனில் இராணுவ ஊடுருவல் தொடர்பாக மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை மாஸ்கோ எதிர்கொண்டுள்ளதால், மார்ச் 8 முதல் பெலாரஸ் தவிர அனைத்து சர்வதேச விமானங்களையும் நிறுத்துவதாக ரஷ்யாவின் முதன்மை விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் தெரிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.