ரஷ்ய ராணுவம் வழங்கிய உணவை அவர்கள் கண் முன்னே உக்ரேனியர்கள் வீசி எறிந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைனில் தொடந்து போர் தொடுத்து வரும் ரஷ்யா இராணுவம், மக்கள் வெளியேறுவதற்காக Mariupol மற்றும் Volnovakha இரண்டு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
உக்ரைனின் தெற்கில் உள்ள கெர்சனை நகரை ரஷ்ய படை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
கார்கிவ், மரியுபோல், தலைநகர் கிவ் ஆகிய நகரில் உக்ரைன்-ரஷ்யா படைகளுக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் தெற்கில் ரஷ்ய ராணுவம் வழங்கிய உணவை, அவர்கன் கண் முன்னே உக்ரேனியர்கள் வீசி எறிந்துள்ளனர்.
குறித்த சம்பவம் கெர்சன் நகரில் நடந்ததாக கூறப்படுகிறது. குறித்து வீடியோவில், ரஷ்ய ராணுவ வீரர்கள் உணவு பொருட்கள் அடங்கிய ஒரு அட்டை பெட்டியை வைத்து செல்கின்றனர்.
உக்ரைன கொடியுடன் வந்த இளைஞர் ஒருவர், ரஷ்ய ராணுவ வீரர்கள் கண் முன்னே அந்த பெட்டிக்குள் இருந்த உணவுகளை ஒவ்வொன்றாக எடுத்து வீசுகிறார்.
People refuse distribution of food by #Russia‘n army
south #Ukraine pic.twitter.com/eBsWHrimfM— C4H10FO2P (@markito0171) March 5, 2022
உடனே மற்றொரு இளைஞர் அந்த பெட்டியை எட்டி உதைத்து, வீசப்பட்ட உணவு பொருட்களை காலால் மிதித்து உடைத்து வீணடிக்கிறார்.