உக்ரைன் – ரஷ்யா போர் முடியாத நிலையில் சீனா இன்று நடந்த நாடாளுமன்ற பொதுக் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை 30 ஆண்டுகளுக்கு முந்தைய அளவான 5.5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது மட்டும் அல்லாமல் சீன ராணுவத்திற்கான பட்ஜெட் அளவையும் உயர்த்தியுள்ளது.
சீனா ஏற்கனவே இந்திய எல்லையில் ராணுவத்தைக் குவித்துள்ள இதேவேளையில் தைவான் நாட்டைக் கைப்பற்றத் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலைில் சீன ராணுவத்திற்கான பட்ஜெட்டை உயர்த்தியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியிலும் சீனாவின் பலே திட்டம்.. இப்ப கூட இப்படி தானா?
சீன அரசு
சீன அரசு கடந்த சில ஆண்டுகளாகவே தனது ராணுவத்தை மேம்படுத்தக் கூடுதலாக ஒதுக்கீடு செய்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ராணுவத்திற்கான பட்ஜெட்-ஐ 6.8 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 7.7 சதவீதம் உயர்த்திச் சுமார் 229 பில்லியன் டாலர் அளவிலான தொகையை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது.
ஆமெரிக்கா – சீனா
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ஆயுதப்படைகளின் ஆதிக்கத்திற்குச் சவால் விடும் வகையில் சக்தி வாய்ந்த ராணுவத்தை உருவாக்கும் பொருட்டுச் சீனா தனது ராணுவத்திற்காக இந்த ஆண்டு 229 பில்லியன் டாலர் அளவிலான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தாகச் சீனா தான் தனது ராணுவத்திற்கு அதிகப்படியான தொகையை ஒதுக்கீடு செய்கிறது.
சீன ராணுவம்
சீன ராணுவத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள், அதிநவீன ஆயுதங்கள், ராணுவ ஜெட் விமானங்கள், அதிவேக ஏவுகணை, அணு ஆயுதம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் எனப் பல ஆயுதங்களை முப்படையிலும் வைத்துள்ளது.
சீனா பொருளாதாரம்
சீனா கொரோனா தொற்றுக் காரணமாகக் கடுமையான நிதி நெருக்கடியிலும், மந்தமான பொருளாதார வளர்ச்சியிலும், அதிகப்படியான கடனிலும் இருக்கும் வேளையிலும் ராணுவத்திற்கு அதிகப்படியான பட்ஜெட்-ஐ ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தைவான் – சீனா பிரச்சனை
தைவான் நாட்டைச் சீனா ஆக்கிரமிக்கப் பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு வரும் நிலையில், தைவான் மீது விரைவில் ரஷ்யாவைப் போலவே போர் நடத்தும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், இதை உறுதி செய்யும் வகையில் தைவான் வான் பரப்பில் கடந்த வாரம் சீனாவின் போர் விமானங்கள் அத்துமீறிப் பறந்தன.
தைவான் – மாவோ
2ஆம் உலகப் போருக்குப் பின் தைவான் சீனாவின் அங்கம் என்றும், தைவான் அரசு தான் சீனாவை நிர்வாகம் செய்து வருகிறது எனக் கருத்து நிலவி வந்த நிலையில் சீனாவில் மாவோ ஆட்சிக்கு வந்த பின்பு நிலைமை மாறியது.
சீனா திட்டம்
தைவான் நாட்டின் பொருளாதார விஸ்வரூப வளர்ச்சி இப்போதும் சீனாவின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது. இதனால் ஹாங்காங்-ஐ கைப்பற்றியதை போல் தற்போது தைவான் நாட்டையும் கைப்பற்ற வேண்டும் திட்டம் தீட்டி வருகிறது ஜி ஜின்பிங் அரசு.
China raised defense budget by 7.1 percent to 229 billion Dollar Amid Economic slowdown
China raised defense budget by 7.1 percent to 229 billion Dollar Amid Economic slowdown ராணுவ பட்ஜெட்-ஐ உயர்த்திய சீனா.. இந்தியாவுக்குப் பாதிப்பா..?!