உக்ரைன் போரில், விமானப்படையைப் பயன்படுத்தாமலேயே ரஷ்யா திட்டமிட்டு வேகமாக முன்னேறி வருவதாக
இங்கிலாந்து
பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலை நாடுகள் ரஷ்யாவைப் பற்றி தப்புக் கணக்கு போடக் கூடாது என்றும் அது எச்சரித்துள்ளது.
உக்ரைன் போர்
தொடங்கியபோது விமானப்படையை வெகுவாக பயன்படுத்தியது ரஷ்யா. இதனால் உக்ரைனில் உள்ள பல விமான தளங்கள் தகர்க்கப்பட்டன. ஆனால் திடீரென தனது விமானப்படையை பயன்படுத்தாமல் நிறுத்தி விட்டது ரஷ்யா. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குழப்பத்தில் ஆழ்ந்தன.
விமானப்படை இல்லாமல் போரில் ஈடுபட்டு வந்ததால் ரஷ்ய ராணுவத்துக்கு இழப்பு அதிகரித்தது. பல உயிரிழப்புகளை அது சந்தித்து வருகிறது. ஆனால் ரஷ்யா, விமானப்படை இல்லாமலேயே தனது திட்டத்தை சரிவர நிறைவேற்றி வருவதாகவும், சீராக முன்னேறி வருவதாகவும் இங்கிலாந்து பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், ரஷ்யா தனது விமானப்படையை மிகவும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தி வருகிறது. இரு்நதாலும் கூட அது மிகத் தெளிவாக முன்னேறி வருகிறது. ரஷ்யாவின் முன்னேற்றம் அது திட்டமிட்டபடி உள்ளது. தெற்கில் உள்ள மைகோலியவ் நகரில் அது வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளது.
உக்ரைன் கைக்கு வந்த “அமெரிக்க ஏவுகணை”.. 200 ரஷ்ய பீரங்கிகள் காலி.. உக்கிரமாகும் யுத்தம்!
கருங்கடல் பகுதியில் உள்ள துறைமுக நகரம் மைகோலியவ். 5 லட்சம் பேர் இங்கு வசிக்கிறார்கள். கப்பல் கட்டும் தளம் உள்ள நகரம் இது. மிக முக்கியமான தொழில்நகரம். இந்த நகரை பிடிக்கும் முயற்சிகளில் ரஷ்யா வேகமாக உள்ளது. நகரை சுற்றி வளைத்துள்ளது. விரைவில் இது பிடிபடும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல ஓடேசா நகரையும் சுற்றி வளைத்து வருகிறது ரஷ்யா என்று அத்தகவல்கள் கூறுகின்றன.
கார்கிவ், செர்ன்ஹிவ், மரியுபோல் ஆகிய முக்கிய நகரங்கள் இன்னும் ரஷ்யாவின் வசம் போகவில்லை. ஆனால் அங்கு கடும் போர் நடந்து வருகிறது. அதேபோல வட கிழக்கில் உள்ள சுமி நகரிலும் போர் முற்றியுள்ளது. தெருக்களில் சண்டைகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. அனேகமாக இந்த நகரங்கள் அடுத்தடுத்து ரஷ்யாவிடம் வீழும் என்றும் கூறப்படுகிறது.
எல்லோரும் பயந்தது நடக்கப் போகுது.. முழு வீச்சில் உக்ரைனைத் தாக்கத் தயாராகும் ரஷ்யா
தற்போது இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. இதையடுத்து மரியுபோல் நகரிலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. போர் தொடங்கியது முதலே இந்த நகரை முற்றுகையிட்டு சண்டையிட்டு வருகிறது ரஷ்யா என்பது குறிப்பிடத்தக்கது. மரியுபோல் நகரில் ரஷ்யத் தாக்குதல் காரணமாக மிகப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக வெளியேற ரஷ்யா அனுமதிக்க வேண்டும் என்று இந்த நகரின் மேயர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் தற்போது தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.