ஷேன் வார்னே மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
ஷேன் வார்ன் ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 194 ஒரு நாள் போட்டிகளில் 293 போட்டிகளை விளையாடி உள்ளார்.
மேலும் 55 ஐபிஎல் போட்டிகளிலும் ஷேன் வார்ன விளை
யாடி உள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் வெற்றி கோப்பையை தட்டி சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஷேன் வார்ன் தான் கேப்டனாக இருந்தார்.
பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஷேன் வார்னே ஷேன் வார்ன் தாய்லாந்தில் இருக்கும் ஒரு வில்லாவில் மயங்கி கிடந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர் மரணத்தில் சந்தேகத்துக்குரிய விடயங்கள் எதுவும் இல்லை என்று தாய்லாந்து பொலிசார் கூறியுள்ளனர்.
ஆனாலும் வார்னேவின் 3 நண்பர்களிடம் சனிக்கிழமையன்று விசாரணை நடத்தப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.