ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு ஸ்டீல் தயாரிப்பாளர்கள் ஹாட்-ரோல்டு காயில் (HRC) மற்றும் TMT பார்களின் விலைகளை டன்னுக்கு ரூ. 5,000 வரை உயர்த்தியுள்ளனர்.
உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியிலும் சீனாவின் பலே திட்டம்.. இப்ப கூட இப்படி தானா?
ரஷ்யா-உக்ரைன் போர்
ரஷ்யா-உக்ரைன் மத்தியிலான போர் காரணமாகக் கடந்த சில நாட்களாகவே ஸ்டீல் விலை அதிகரித்து வரும் நிலையில், மேலும் இரு நாடுகளுக்கு இடையே போர் தொடரும் காரணத்தால் ஏற்றுமதி, இறக்குமதியில் இருக்கும் நெருக்கடி தொடரும் என்பதால் வரும் வாரங்களில் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை உயர்வு
வெள்ளிக்கிழமை சந்தை நிலவரத்தின் பிடி உள்நாட்டு ஸ்டீல் தயாரிப்பாளர்களின் விலை திருத்தத்திற்குப் பிறகு, ஒரு டன் HRC இன் விலை சுமார் ரூ. 66,000 ஆகும், அதே நேரத்தில் TMT பார் விலை ஒரு டன் ரூ. 65,000 ஆக உள்ளது.
விநியோகச் சங்கிலி
சர்வதேச அளவில் விநியோகச் சங்கிலியை (Supply Chain) ரஷ்யா – உக்ரைனை போர் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து மூலப்பொருட்களின் விலை அதிகரித்து, உள்ளீட்டுச் செலவுகள் அதாவது இன்புட் காஸ்ட் அதிகரித்துள்ளது.
நிலக்கரி
உதாரணமாகக் கோக்கிங் நிலக்கரி ஒரு டன்னு எப்போதும் இல்லாத வகையில் 500 டாலராக உயர்ந்துள்ளது, வர்த்தக மற்றும் உற்பத்தி சந்தையைக் கடுமையாகப் பாதித்து வருகிறது. இது கடந்த வார விலை அளவீட்டை ஒப்பிடும்போது சுமார் 20 சதவீதம் அதிகமாகும்.
ஆஸ்திரேலியா
ஸ்டீல் தயாரிப்பின் முக்கிய மூலப்பொருளாக விளக்கும் நிலக்கரி தேவையில் 85 சதவீதத்தையும் இந்தியா இறக்குமதி வாயிலாகவே பூர்த்திச் செய்து வருகிறது. இந்திய நிலக்கரியை அதிகளவில் ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்குகிறது. இதேபோல் சிறிய அளவீட்டை தென்னாப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைன்
மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டும் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களாக உள்ளன. இதைத் தொடர்ந்து கோக்கிங் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட முக்கிய மூலப் பொருட்களின் சப்ளையர்களாக இந்நாடுகள் இருப்பதால் தற்போது ஸ்டீல் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
Russia-Ukraine crisis: Steel prices jump up to Rs 5,000 per tonne
Russia-Ukraine crisis: Steel prices jump up to Rs 5,000 per tonne ஸ்டீல் விலை தாறுமாறாக உயர்வு.. கார் முதல் வீடு வரை விலை உயர்வு..!