ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி பரிசோதனைக்கு பரிந்துரை| Dinamalar

புதுடில்லி:கொரோனா வைரசுக்கு எதிரான ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற தடுப்பூசியை ‘பூஸ்டர் டோசாக’ வழங்குவதற்கான மூன்றாம் கட்டப் பரிசோதனை நடத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

ரஷ்ய நாட்டு தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு இணையான மூலப் பொருட்களை உடையது ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி. தெலுங்கானா மாநிலம் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து செயல்படும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு சில நிபந்தனைகளுடன் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அலுவலகம் கடந்த மாதம் அனுமதி அளித்திருந்தது.

இதைத் தொடர்ந்து இந்த தடுப்பூசியை ‘பூஸ்டர் டோசாக’ பயன்படுத்துவதற்கான மூன்றாம் கட்டப் பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அலுவலகத்தின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.