ஹரியானா: கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது ஆளும் பாஜக அரசு!

இந்தியாவில் மதரீதியாகக் கொலைகள் நிகழும்போதும், மதக்கலவரங்கள் ஏற்படும்போதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக்கப்படும் ஒரு விஷயம், `கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்’ தான். சமீபத்தில் கூட, தமிழகத்தில் அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மதமாற்ற தடைச் சட்டம் என்ற குரல் ஓங்கியது. இந்த நிலையில், தற்போது ஹரியானா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஹரியானா முதல்வர் மனோஹர் லால் கட்டார் ‘கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதா’வை அறிமுகம் செய்தார். ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பாஜக

இதற்கிடையில் கட்டாய மதமாற்றத் தடை சட்ட மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசிய மனோஹல் லால் கட்டார், “இந்த மசோதாவில் எந்தவொரு மதமும் குறிப்பிடப்படவில்லை. இதன் நோக்கம், வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதே. அச்சுறுத்தல் அல்லது திருமணத்தை மக்களை மதமாற்றம் செய்வதற்கான வழிமுறையாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒருவர் தன் விருப்பப்படி மதம் மாற விரும்பினால், அதற்கான விதிமுறைகளும் இந்த மசோதாவில் எழுதப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த மசோதா எந்த மதத்தையும் பாகுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்படவில்லை” என்று பேசினார். இதற்கு அமைச்சரவையில் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் மதம் மறைக்கப்பட்டால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், 3 லட்ச ரூபாய்க்கு குறையாமல் அபராதமும் செலுத்த வேண்டும் என்று மசோதாவில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.