ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில்
பிரபாஸ்
நடித்துள்ள திரைப்படம்
ராதே ஷ்யாம்
. இந்தப் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் பிரபாஸ்,
சத்யராஜ்
, சிபி சத்யராஜ், நடிகை
பூஜா ஹெக்டே
, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சத்யராஜ் என் செல்ல கட்டப்பா… ராதே ஷ்யாம் பிரஸ் மீட்டில் பிரபாஸ் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசியதாவது, பிரபாஸை நாங்கள் டார்லிங் என சொல்வோம், பூஜா டார்லிங்கின் டார்லிங், கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன் என கேட்கிறார்கள், பெரியார் படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன், ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன். அப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும்.
என்னது… வலிமை படத்தின் இந்தக் காட்சி காப்பியா? தீயாய் பரவும் வீடியோ!
என்ன சொன்னாலும் அசர மாட்றானே… தனுஷால் புலம்பி தீர்க்கும் கஸ்தூரி ராஜா?
நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன், அதை என்ன சொல்வது. நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும். இந்தப்படம் மிக அழுத்தமான காதல் கதை, பிரபாஸ் பறந்து சண்டை போடுவார் என்றால், இதில் கப்பலே பறக்கிறது. இங்கு ஜேம்ஸ் கேமரூன் தான் வந்திருக்க வேண்டும். அவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது.
ரொம்ப அழுத்தம்… அக்காக்களிடம் கூட சொல்லாத தனுஷ்!
பிரபாஸின் அழகுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது. ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு முக்கியமான பொறுப்பு வந்துள்ளது. பான் இந்தியா என்று எல்லா ஸ்டேட்டிலிருந்து ஒரு நடிகரை போட்டு எடுக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் உண்மையில் பான் இண்டர்னேஷனல் படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
மீண்டும் தியேட்டரில் COMEBACK கொடுப்பாரா சூர்யா?