Ukraine News: உக்ரைன் வான்வெளி எல்லையை மூடுமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்த நேட்டோ அமைப்புக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது மேலும் குண்டுவீச’ ரஷ்யாவுக்கு நேட்டோ’ பச்சைக்கொடி காட்டியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது குறித்து ஆலோசனை!
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக, தமிழக அரசு அமைத்த சிறப்பு குழு இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறது. உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
10வது நாளாக தொடரும் தாக்குதல்!
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 10வது நாளாக இன்றும் தொடர்கிறது. கார்கிவ் நகரில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Ukraine News live updates
ரஷ்யாவில் பேஸ்புக், ட்வீட்டர் முடக்கம்!
உக்ரைன் போருக்கு எதிராக எதிர்ப்புகள் எழுவதாகவும், ரஷ்ய ராணுவம் குறித்த போலியான தகவல்கள் பரவுவதாகவும் கூறி, பேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக ஊடகங்களுக்கு ரஷ்யா தடை விதித்தது. ராணுவம் பற்றி போலி செய்தி வெளியிட்டால் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்தார்.
சுலோவாகியா பிரதமர் உடன் அமைச்சர் கிரண் ரிஜிஜூ சந்திப்பு!
சுலோவாகியா பிரதமர் எட்வார்ட் ஹெகர் உடன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சந்திப்பு. உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவியதற்கு கிரண் ரிஜிஜூ நன்றி தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு ஏற்றுமதி நிறுத்தம்.. சாம்சங் அறிவிப்பு!
ரஷ்யாவில் அனைத்து சேவைகளையும் நிறுத்துவதாக இன்டெல் கார்பரேஷன், ஹெச்.பி., ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் ஏற்கெனவே அறிவித்த நிலையில், தற்போது சாம்சங் நிறுவனம் ரஷ்யாவுக்கு ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,921 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பால் மேலும் 289 பேர் உயிரிழந்தனர். 63 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 776 உயர்ந்து ரூ. 39,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,790க்கு விற்பனை செய்யப்படுகிறது.!
மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேக்கு மரியாதை செலுத்தும் விதமாக உலகின் மிகப்பெரிய மெல்போர்ன் மைதானத்தின் தி கிரேட் சதர்ன் ஸ்டாண்ட் என்ற பெயரை மாற்றி, ஷேன் வார்னே ஸ்டாண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது!
மொஹாலியில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா, அஷ்வின் களத்தில் விளையாடி வருகின்றனர். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இந்தியா 357 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்திருந்தது. முன்னதாக ஆட்டம் ஆரம்பிக்கும் முன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மறைவுக்கு இந்திய, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.
உக்ரைனில் சிக்கித் தவித்த மேலும் 229 இந்தியர்கள் ருமேனியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று டெல்லி திரும்பினர்.
போர் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை உக்ரைன் மீது ரஷ்யா 500க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு டஜன் வீதம் பல்வேறு வகையான ஏவுகணைகளை ஏவுகிறது என்று பென்டகன் அதிகாரி கூறியுள்ளார்.
மதுரையில் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில்’ அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் புதன்கிழமை அன்று’ அலுவலகத்துக்கு பேருந்து மூலமாகவோ அல்லது நடந்தோ வர வேண்டுமென ஆட்சியர் அனீஷ்சேகர் உத்தரவு!
மணிப்பூரில் 6 மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளில், இறுதிக்கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மறுசீரமைப்பு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா நிறுவனம், சங்கப்பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாக நியமித்து அரசு உத்தரவு!
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மரக்காணம் பகுதியில் உள்ள கடற்கரையில் கடல் சீற்றம் நிலவுகிறது. முகத்துவாரம் வழியாக கடல்நீர் உப்பளத்தில் புகுந்ததால், தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த 3000 ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கின.
சென்னை கீழ்ப்பாக்கம் பெரியார் சாலையில் காவல்துறை துணை கண்காணிப்பாளரின் அரசு வாகனம் மோதி பெண் உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிய டிஎஸ்பி குமரனின் மகன் லோகேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, தலைமைச்செயலகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நேற்று, ஓபிஎஸ் சகோதரர் ராஜா – சசிகலா இருவரும் மீண்டும் சந்தித்தனர். தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.771.73 கோடியும், மத்திய அரசு சார்பில் ரூ.581.48 கோடியும் மொத்தம் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மகேஷ், புதிய செயலாளராக நியமனம் செய்து, கட்சி தலைமை அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களில் வார்னேவும் ஒருவர். மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான், பெஷாவரில் உள்ள மசூதியில் வெடிகுண்டு வெடித்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது. மேலும் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மந்திர சுழற்பந்து வீச்சால் நம்மை மயக்கிய ஷேன் வார்ன் எனும் கிரிக்கெட் மேதையை இழந்துவிட்டோம். ஷேன் வார்னே நமக்களித்த தருணங்கள் நினைவில் சுழல்கின்றன –கமல்ஹாசன் ட்வீட்!
மந்திர சுழற்பந்து வீச்சால் நம்மை மயக்கிய ஷேன் வார்ன் எனும் கிரிக்கெட் மேதையை இழந்துவிட்டோம். அவர் நமக்களித்த தருணங்கள் நினைவில் சுழல்கின்றன.
— Kamal Haasan (@ikamalhaasan) March 4, 2022
வாழ்க்கை மிகவும் நிலையற்றது மற்றும் கணிக்க முடியாதது. களத்தில் சிறந்த வீரராகவும், வாழ்க்கையில் சிறந்த மனிதராகவும் திகழ்ந்த ஷேன் வார்னே மறைவை ஏற்க முடியவில்லை – விராட் கோலி
Life is so fickle and unpredictable. I cannot process the passing of this great of our sport and also a person I got to know off the field. RIP #goat. Greatest to turn the cricket ball. pic.twitter.com/YtOkiBM53q
— Virat Kohli (@imVkohli) March 4, 2022
ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே மரணம் குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உண்மையான மேதையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் மற்றும் கிரிக்கெட் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான ஷேன் வார்னே(52) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியா அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஷேன் வார்னே தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.