ரஷ்யாவின் தாக்குதல் மூலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைன் நாட்டுக்கு உலக நாடுகள் மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் மில்லயன் கணக்கில் பணத்தை நன்கொடை அளித்து வருகிறது. இதில் அதிகப்படியான பணம் எல்லை பாதுகாப்புக்கு செல்லும் காரணத்தால் உக்ரைன் மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலையில் உக்ரைன் மக்களுக்கு நேரடியாகப் பண உதவி செய்ய நெட்டிசன்ஸ் இறங்கியுள்ளனர்.
சமுக வலைத்தளத்தில் ஒருபக்கம் ரஷ்யா மீதும், புதின் மீதும் வெறுப்பை வாரியிறைத்து வரப்படும் நிலையில், உக்ரைன் மக்களுக்கு ஸ்மார்ட்டான வழியில் influencer ஒருவர் உதவியதைத் தொடர்ந்து தற்போது பல லட்சம் நெட்டிசன்கள் உக்ரைன் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
ஒரு முறை முதலீடு செய்தால் போதும், ரிட்டயர்மென்ட் பற்றி நோ டென்ஷன்..! #LIC
AirBnb மூலம் உதவி
இந்தியாவைப் போலவே உக்ரைன் நாட்டிலும் பல வெளிநாட்டு நிறுவன சேவைகள் இருக்கிறது, இப்படி உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய ஹோட்டல் மற்றும் ஹோம் ஸ்டே புக்கிங் சேவை நிறுவனமான AirBnb வாயிலாக அமெரிக்க மக்கள் மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளில் இருந்து நிதியுதவி குவிந்து வருகிறது.
ரஷ்யாவின் தாக்குதல்
ரஷ்யாவின் தாக்குதல் மூலம் உக்ரைன் நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் வீடுகளைத் தேடி தேடி தங்குவதற்காக அமெரிக்கர்கள் புக் செய்து வருகின்றனர். போர் காரணத்தால் யாரும் செல்ல முடியாது என்பது அனைவருக்கும் தெரியும், ஆயினும் இந்தப் புக்கிங் வாயிலாகப் பணத்தை அனுப்பி வருகின்றனர்.
டாமி மார்கஸ்
அமெரிக்காவின் புரூக்ளின்-ஐ சேர்ந்த influencer ஆன டாமி மார்கஸ் தனது @Quentin.Quarantino என்னும் பிரபலமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உக்ரைனுக்குச் செல்லாமலேயே உக்ரைன் மக்களுக்கு இந்த ஏர்பிஎன்பி புக்கிங் மற்றும் பேமெண்ட் மூலம் உதவ முடியும் என்ற ஐடியாவை பகிர்ந்தார்.
நிதியுதவி
இதைத் தொடர்ந்து பல பிரபலங்கள் மற்றும் influencer-கள் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏர்பிஎன்பி மூலம் புக் செய்யப்பட்ட ஹோம் ஸ்டேக்கு செல்லாமலேயே பணத்தைச் செலுத்தியதற்கான ஸ்க்ரீன்ஷாட் பகிரப்பட்டு வருகிறது.
வைரல்
டாமி மார்கஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கமான @Quentin.Quarantino இந்த ஐடியாவை பகிர்ந்த மணிநேரத்தில் 100க்கும் அதிகமானவர்கள் பணத்தை அனுப்பி உதவி செய்துள்ளது மட்டும் அல்லாமல் பணத்தைப் பெற்ற உக்ரைன் மக்கள் கண்ணீருடன் நன்றி தெரிவித்துள்ளனர்.
கட்டணம் ரத்து – ஏர்பிஎன்பி
மக்களின் இந்தச் செயலுக்கு உதவும் விதமாக உக்ரைன் நாட்டில் தற்போது ஏர்பிஎன்பி வாயிலாகப் புக்கிங் செய்யப்படுவதற்கான அனைத்து கட்டணத்தையும் ரத்துச் செய்வதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரையன் செஸ்கி
ஏர்பிஎன்பி-இன் சிஇஓ பிரையன் செஸ்கி தனது டிவிட்டர் பக்கத்தில் “48 மணி நேரத்தில், 61,406 இரவுகளுக்கு உக்ரைனில் ஹோம் ஸ்டே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 1.9 மில்லியன் டாலக் அளவிலான தொகை உக்ரைன் மக்களுக்கு நேரடியாகச் செல்கிறது. இது போன்ற ஒரு அருமையான யோசனைக்கு மிகவும் நன்றி.” என ட்வீட் செய்துள்ளார்
People Showering money to Ukraine People after influencer Showed way to help though Airbnb
People Showering money to Ukraine People after influencer Showed way to help though Airbnb அந்த மனசு தான் சார் கடவுள்.. உக்ரைன் மக்களுக்குப் பணத்தை அள்ளிக்கொடுக்கும் நெட்டிசன்ஸ்..!