ஆபரேஷன் கங்கா – சுலோவேகியாவில் இருந்து 154 இந்தியர்களுடன் சிறப்பு விமானம் டெல்லி வந்தது

புதுடெல்லி:
ரஷிய போரால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.
ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
மத்திய அரசின் அயராத நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன் வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், நேற்று இரவு 154 மாணவர்களுடன் சுலோவேகியா தலைநகர் கொசைசில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று அதிகாலை 5 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது. இதில் பெரும்பாலும் மாணவர்களே அடங்கியிருந்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.