உக்ரைனின் சுமி நகரில் சிக்கித் தவித்துவரும் இந்திய மாணவர்கள் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
1 நிமிட வீடியோவில் இந்திய மாணவிகள் இருவரும் பேசுகின்றனர். அவர்கள் கூறியதாவது:
எங்களை மீட்க யாருமே வரவில்லை. இதுவே எங்களின் கடைசி வீடியோவாகக் கூட இருக்கலாம். எங்கள் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு இந்தியத் தூதரகம் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். இதுவே எங்களின் கடைசி வீடியோ. நாங்கள் ரஷ்ய எல்லைக்கு நடந்தே செல்லப் போகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் மாணவர்களைத் தொடர்பு கொண்டது. அப்போது, உங்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை செய்து வருகிறோம். வெளியே யாரும் செல்ல வேண்டாம். பாதுகாப்பான இடங்களில் இருங்கள் என்று அறிவுறுத்தினர்.
We are deeply concerned about Indian students in Sumy, Ukraine. Have strongly pressed Russian and Ukrainian governments through multiple channels for an immediate ceasefire to create a safe corridor for our students.
— Arindam Bagchi (@MEAIndia) March 5, 2022
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்திய மாணவர்கள் குறித்து நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். ரஷ்யா மற்றும் உக்ரைன் அரசுகளை பல்வேறு வழிகளில் தொடர்புகொண்டு மாணவர்களை வெளியேற்றுவதற்காக போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகிறோம். பாதுகாப்பான இடங்களில் மாணவர்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தேவையில்லாத ரிஸ்கை எடுக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா போர்நிறுத்தத்தை கடைபிடிக்கவில்லை; உக்ரைன் குற்றச்சாட்டு
சுமி நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் 800 க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் தங்கியிருக்கின்றனர்.
விடுதிகளில் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அவர்கள் பனிக் கட்டிகளை உருக்கி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர் மாணவர் ஒருவரின் உறவினர் தெரிவித்தார்.
-Written by Jayprakash S Naidu
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“