இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 174 ரன்களில் சுருண்டது. பேட்டிங்கில் 175 ரன்களை குவித்து அசத்திய இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இலங்கை அணியில் அதிகபட்சமாக நிசாங்கா 61 ரன்களும், அசலங்கா 29 ரன்களும், கருணரத்னே 28 ரன்களும் சேர்த்தனர்.