மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், ஏழாம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தாலும், அகிலேஷ் யாதவுக்கு மக்களிடம் செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது மும்முனைப் போட்டி இருந்தாலும் கூட, உண்மையான போட்டி என்னவோ பாஜக-சமாஜ்வாடி இடையேயேதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, ஜான்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷா
, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஏழைகளை பற்றி பேச மட்டுமே செய்கின்றன. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக உழைத்து வருகின்றனர் என்றார்.
மேலும் பேசிய அமித் ஷா, “கொரோனா தடுப்பூசியை மோடியின் தடுப்பூசி என்று சொல்லியதோடு, அது தீங்கு விளைவிக்கும் என்று பிரசாரம் செய்து மக்களிடம் தடுப்பூசி போட வேண்டாம் என்று கூறியவர்தான் அகிலேஷ் யாதவ். ஆனால்,
அகிலேஷ் யாதவ்
மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.” என்று விமர்சித்தார். மக்களின் உயிரை சுமக்காமல் அரசியல் செய்பவர்கள் அரசியலில் நீடிக்கக் கூடாது என்றும் அப்போது அமித் ஷா தடாலடியாக பேசினார்.