போலந்து போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவது பற்றிப் பேச்சு நடத்தி வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலை முறியடிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருவது குறிப்பிடத் தக்கது. இதனிடையே கருங்கடல் துறைமுக நகரான ஒடேசா மீது குண்டுமழை பொழிய ரஷ்ய ராணுவம் தயாராகி வருவதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அச்சம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவி செய்துவரும் பெலாரஸ் நாட்டின் மீது ஏற்றுமதித் தடைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாகத் தென்கொரியா தெரிவித்துள்ளது.