உக்ரைனில் இரத்தமும் கண்ணீரும் ஆறாகப் பாய்வதாகத் தெரிவித்துள்ள போப் பிரான்சிஸ், போரை நிறுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் இருநாட்டுப் படைவீரர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் விடுத்துள்ள செய்தியில், உக்ரைனில் இரத்தமும், கண்ணீரும் ஆறாகப் பாய்வதாகத் தெரிவித்துள்ளார். இது வெறும் ராணுவ நடவடிக்கை இல்லை என்றும், உயிரிழப்பு, பேரழிவு, துயரம் ஆகியவற்றை விதைக்கும் போர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அகதிகளுக்காக மனிதநேய நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசிய துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்டோகன், உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.