உக்ரைன் நெருக்கடி குறித்து விவாதிக்க இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் (Naftali Bennett) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை (Vladimir Putin) மாஸ்கோவில் சனிக்கிழமை சந்தித்து பேசினார். போருக்கு மத்தியில் புடின் மற்றும் நஃப்தாலியின் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு 3 மணி நேரம் நீடித்தது.
மத்தியஸ்தம் செய்ய முயற்சி
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலில் மத்தியஸ்தம் செய்ய இஸ்ரேல் முன்வந்துள்ளது என செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கும்!
பிப்ரவரி 24 அன்று உக்ரைனில் ரஷ்யா தொடங்கிய இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, இஸ்ரேல் இந்த பிரச்சினையில் சமநிலையான நிலைப்பாட்டை எடுக்க முயற்சித்தது. இஸ்ரேல் பிரதமர் இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். பெலாரஸில் இரு தரப்பையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துவதில் இஸ்ரேலின் பங்கும் முக்கியமானதாக விளங்குகிறது.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!
இரண்டு சுற்று பேச்சு வார்த்தை தோல்வி
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான 2 சுற்று பேச்சுவார்த்தைகள் பெலாரஸில் நடைபெற்றன. இருப்பினும், இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளும் உறுதியான முடிவை எட்டவில்லை. மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட நிலையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.