கீவ்: உக்ரைன் மாணவரின் பூனையை இந்தியாவுக்கு கொண்டுவர அனுமதித்த இந்திய விமானப்படை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.
உக்ரைனில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் தற்போது மீட்பு விமானங்களில் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த விமான மீட்பில் தற்போது வேடிக்கையான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 21 வயதான ஆகில் ராதாகிருஷ்ணன் என்கிற மருத்துவம் பயிலும் மாணவர் தனது அம்மிணி என்கிற பெண் பூனையை பிரிய முடியாமல் அதையும் தன்னுடன் இந்தியாவுக்கு கொண்டுவர அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விலங்குகள் எல்லாம் மீட்பு விமானங்களில் அனுமதிக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்ட நிலையில் மாணவர் மற்றும் பூனையின் நெருக்கத்தை கண்டு வியந்த அதிகாரிகள் பின்னர் பூனையையும் விமானத்தில் ஏற்ற அனுமதி அளித்தனர்.
விரைவில் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார் அகில். சக நண்பர் ஒருவர் பரிசளித்த இந்த பெண் பூனைமீது அதிக பாசம் கொண்டதன் காரணமாக அகில் இதனை உடன் அழைத்து வருகிறார். அவரது இந்த செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு பாராட்டு குவிகிறது.
Advertisement