புதுச்சேரி, ; ‘திறன் மேம்பாடு மற்றும் பிரச்னைகளுக்கு உள்நாட்டு தொழில்நுட்பங்களை கொண்டே தீர்வுகளை பெற ஊக்குவிக்கப்பட்டு வருகிறது’ என இந்திய விமானப்படை உதவி தலைமை தளபதி ஏர் வைஸ் மார்ஷல் ராஜிவ் ஷர்மா தெரிவித்தார்.புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:இந்திய விமானப்படையின்
மனிதவள மேம்பாட்டு் திட்டத்தின் ஒரு அங்கமான ‘ஆகாஷ்தீப்’ திட்டம், விமானப்படை வீரர்களின் உயர் கல்வி விருப்பங்களை நிறைவேற்றி வருகிறது.இதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை புதுச்சேரி பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இந்திய விமானப்படையின் தேவைக்கு உட்பட்ட துறைகளில் விமானப்படை அதிகாரிகள் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை தொடர்வர்.இந்திய விமானப்படையில் திறன் மேம்பாடு மற்றும் பிரச்னைகளுக்கு உள்நாட்டு தொழில்நுட்பங்களை கொண்டே தீர்வுகளை பெற ஊக்குவித்து வருகிறது. அதிகாரிகள் பல்வேறு துறைகளில் உயர் தகுதிகளை பெறுவதற்காகத் தான் ஆகாஷ்தீப் போன்ற திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement