மெக்சிகோவில், உள்ளூர் கால்பந்து போட்டியின் போது, இரு அணி ரசிகர்களும் மைதானத்துக்குள் புகுந்து பலமாகத் தாக்கி கொண்டதில் 22 பேர் காயமடைந்தனர்.
கெரேட்டரோ நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், உள்ளூர் அணியான கெரேட்டரோவிற்கு எதிராக அட்லஸ் அணி முதல் கோலை அடித்தது.
அதை தொடர்ந்து பார்வையாளர் மாடத்தில், இரு அணி ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மைதானத்துக்குள் புகுந்த ரசிகர்கள் ஒருவரை ஒருவர் அடித்து, உதைத்துகொண்டதால் போட்டி பாதியில் கைவிடப்பட்டது.
ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.