திமுகவில் சாதியப் பாகுபாடு காட்டப்படுவதாக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி முன் தன் மனக்குமுறலை வெளியிட்டவரை கட்சியைவிட்டு தற்காலிக நீக்கம் செய்து தலைமை உத்தரவிட்டுள்ளது.
திமுக மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயகுமார் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தன்னை Sc என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து தனக்கு சீட்டு கிடைக்காமல் செய்கிறார்கள் – திமுக மகளிர் அணி செயலாளர் திருமதி மீனா ஜெயகுமார்.
இதுக்கு பேருதான் சமூக நீதியாடா.. 🤦♂️ pic.twitter.com/srpLuyNHbK
— சேதுபதி (@sethupathyse) February 28, 2022
கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவர் அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று அந்த அறிவிப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை, கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கோ அய்யப்பன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.