லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் மற்றும் வருமானத்தை அளிக்கக் கூடிய பல்வேறு பாதுகாப்பான திட்டங்களை வழங்குகிறது.
இந்தியாவில் அதிகப்படியான மக்கள் தங்கள் எதிர்காலம் மற்றும் ஓய்வூதியத்தைப் பாதுகாக்கப் பெற எல்ஐசி பாலிசிகளில் முதலீடு செய்கிறார்கள் இதற்கு முக்கியக் காரணம் எல்ஐசி நிறுவனத்தின் மீது இருக்கும் நம்பிக்கை தான்.
எல்ஐசி நிறுவனத்தில் புதிய அதிகாரி.. அதுவும் ரிலையன்ஸ் நிப்பான் முன்னாள் ஊழியர்..!!

இளம் தலைமுறை
இந்தியாவில் தற்போது இளம் தலைமுறையினர் எந்த அளவுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ அதே அளவிற்கு ஓய்வூதிய திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் டிரெண்ட் உருவாகியுள்ளது. இந்த நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் முக்கியமான பிரபலமான அதேநேரம் அதிக லாபம் அளிக்கக் கூடிய திட்டத்தைப் பற்றித் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா
எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா என்னும் திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களுக்கு உறுதியான மாதாந்திர ஓய்வூதியத்தை எல்ஐசி வழங்குகிறது. வாழ்நாள் முழுவதும் ஓய்வூதிய பலன்களைப் பெற வேண்டும் என்பதால் இத்தகைய திட்டத்தைச் சிறப்பான முறையில் தேர்வு செய்ய வேண்டியது முக்கியம்.

மாதம் 1000 ரூபாய்
இந்நிலையில் எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா திட்டம் மூலம் முதலீட்டாளர்கள் சிங்கிள் பிரீமியமில் அதாவது மொத்தமாகப் பணத்தை ஓரு தவணையில் செலுத்த வேண்டும். இந்தத் திட்ட முதலீட்டில் மாதம் 1000 ரூபாய் முதல் அதிகப்படியாக எவ்வளவு வேண்டுமானாலும் பென்ஷன் பெறும் வகையில் முதலீடு செய்யலாம்.

குறைந்தபட்சம் 2 லட்சம்
அதாவது எவ்வளவு அதிகமாக முதலீடு செய்கிறோமோ, அந்த அளவிற்கு அதிகமாகப் பென்ஷன் கிடைக்கும். மேலும் இத்திட்டத்தில் 5 முதலீட்டுப் பிரிவுகள் பிரிக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச தொகையான அதாவது மாதம் 1000 ரூபாய் கிடைக்கும் திட்டத்திற்கு 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

5 பிரிவுகள்
இதைத் தொடர்ந்து 2 – 5 லட்சம் ரூபாய், 5-10 லட்சம் ரூபாய், 10 -25 லட்சம் ரூபாய், 25 லட்சம் மற்றும் அதற்கு மேல் என மொத்தம் 5 பிரிவுகள் பிரிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடனையும் பெற முடியும், ஆனால் இத்திட்டம் துவங்கி 6 மாதத்திற்குப் பின்பு தான் கடன் பெற முடியும்.
LIC Saral Pension Policy benefits: Pay single premium and get minimum Rs 12,000 pension
LIC Saral Pension Policy benefits: Pay single premium and get minimum Rs 12,000 pension ஒரு முறை முதலீடு செய்தால் போதும், ரிட்டயர்மென்ட் பற்றி நோ டென்ஷன்..! #LIC