கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்திருக்கும் அறிக்கையில், சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக ஏற்கெனவே உசிலம்பட்டி நகர்மன்ற தேர்தலில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 4 திமுக பொறுப்பாளர்களை தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்தி: பப்ஜி மதனுக்கு சலுகை காட்டியதால் பணி மாற்றமா? – டாக்டர் நவீன் குமார் விளக்கம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM