வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று மருத்துவ பயிற்சியை (இன்டெர்ன்ஷிப்) மேற்கொண்டு வரும் இந்திய மாணவர்கள், அவர்களது பயிற்சி தவிர்க்க முடியாத காரணத்தால் தடை படுமாயின் அவர்கள் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ளலாம்என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்து அங்கேயே மருத்துவ பயிற்சியை மேற் கொண்டு வரும் இந்திய மாணவர் கள் கரோனா பரவல் காரணமாகவோ அல்லது ரஷ்யா-உக்ரைன் போர் சூழல் காரணமாகவோ நாடு திரும்பியிருந்தால், அவர்கள் இந்தியாவில் மருத்துவ பயிற்சி மேற்கொள்ளலாம் என நேற்று முன்தினம் என்எம்சி அறிவித்தது.
வெளிநாடுகளில் மருத்துவம் முடித்த மாணவர்கள் மருத்துவ பயிற்சி மேற்கொள்ள வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வு (எப்எம்ஜிஇ) எழுதுவதற்கு உரிய வழிமுறைகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் மாணவர்கள் எத்தனை மாதம் பயிற்சி முடித் திருந்தாலும், எஞ்சிய காலத்தை இந்தியாவில் தொடர வழிவகை செய்யப்படும் என்றும் என்எம்சி சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
என்எம்சி பிறப்பித்த இந்த உத்தரவு உக்ரைனில் போர் சூழல் காரணமாக மருத்துவ பயிற்சியைத் தொடர முடியாமல் இந்தியாவுக்குத் திரும்பிய ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவுவதாக அமையும்.
வெளிநாடுகளில் மருத்துவம் முடித்த இந்திய மாணவர்களுக்கு மருத்துவ கவுன்சில் தேசிய தேர்வு வாரியம் எப்எம்ஜிஇ தேர்வை நடத்தும். இதில் தேர்ச்சியடையும் மாணவர்கள் இங்கு 12 மாதமோ அல்லது அவர்களது பயிற்சிக் காலத்தில் எஞ்சிய மாதங்களோ பயிற்சி மேற்கொள்ள முடியும்.
இவ்விதம் பயிற்சி மேற்கொள் ளும் மருத்துவ மாணவர்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என என்எம்சி அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் இந்திய பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சலுகை களும், உதவி தொகை களும் வழங்கப்பட வேண்டும் எனவும் என்எம்சி சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது. -பிடிஐ