குடியிருப்பு கட்டுமான இடங்களில் மரங்களுக்கு இடம் ஒதுக்க சட்டம்?| Dinamalar

புதுடில்லி : குடியிருப்பு கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில், 10 சதவீத நிலப்பகுதியை, மரங்கள் வளர்ப்பதற்கு ஒதுக்குவதை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நம் நாட்டில், மாசுவை குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது.இந்நிலையில், 2022ம் ஆண்டின் கட்டட கட்டுமானம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை விதிமுறைகளின் வரைவு அறிக்கையை, சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.

அதில், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான சில விதிகள் குறிப்பிடப்பட்டிருந்தன.அதன் விபரம்:குடியிருப்பு மற்றும் வணிக கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில், ஒவ்வொரு 860 சதுர அடி பரப்பளவு நிலப்பகுதியிலும், குறைந்தபட்சம், ஒரு மரமாவது நட வேண்டும். 10 சதவீத நிலப்பகுதி, மரங்கள் வளர்க்க ஒதுக்கப்பட வேண்டியது அவசியம்.

latest tamil news

சதுப்பு நிலம் மற்றும் நீர்நிலைகள் உள்ள இடங்களில், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படக் கூடாது. மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் அனுமதியின்றி, கட்டுமான பணிகளுக்கு, நிலத்தடி நீரை உபயோகிக்கக் கூடாது.கட்டடங்களில், மழை நீர் சேகரிக்கும் திட்டமும் அமல்படுத்தப்பட வேண்டும்.

மொத்தமுள்ள நிலத்தில், 20 சதவீதம், திறந்தவெளியாக இருக்க வேண்டியது கட்டாயமாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த விதிமுறைகளில் ஆட்சேபனை இருக்குமானால், 60 நாட்களுக்குள், அது குறித்து அரசிடம் தெரிவிக்க, மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.